Need another language?

டிமென்ஷியா என்பது சாதாரண வயதானதன் ஒரு பகுதி மட்டுமல்ல. இது அல்சைமர் போன்ற நமது மூளையைப் பாதிக்கும் நோய்களால் ஏற்படுகிறது.

முதுமைக்கால மறதி நோய் (டிமென்ஷியா) என்றால் என்ன?

நாம் சிந்திக்கின்ற, உணருகின்ற, நினைவில் வைத்துக்கொள்கின்ற மற்றும் செய்கின்ற அனைத்தையும் நமது மூளை கட்டுப்படுத்துகிறது.

ஒரு நபரின் மூளை சரியாக வேலை செய்வதைத் தடுக்கின்ற நோய்கள் உள்ளன. ஒருவருக்கு இந்த நோய்களில் ஒன்று இருக்கும்போது, ​​அவர்களுக்குச் சிந்தனை, நினைவாற்றல் மற்றும் பேசுவதில் பிரச்சினைகள் இருக்கலாம். மற்றவர்களுக்கு விசித்திரமாகத் தோன்றும் விஷயங்களை அவர்கள் சொல்லலாம் அல்லது செய்யலாம், மேலும் அன்றாட விஷயங்களைச் செய்வது அவர்களுக்குக் கடினமாக இருக்கலாம். அவர்கள் முன்பு இருந்த நபரைப் போல் இல்லாமல் இருக்கலாம்.

காலப்போக்கில் இந்தப் பிரச்சினைகள் மோசமடையும் போது, ​​மருத்துவர்கள் அவற்றை விவரிக்க டிமென்ஷியா (முதுமைக்கால மறதி நோய்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம்.

முதுமைக்கால மறதி நோய் என்பது நமக்கு வயதாவதால் மட்டும் ஏற்படும் ஒரு நோயல்ல. இது வெவ்வேறு நோய்களால் ஏற்படுகிறது. இந்த நோய்கள் மூளையின் வெவ்வேறு பகுதிகளைப் பாதிக்கின்றன, எனவே இவை மக்களை வெவ்வேறு வழிகளில் பாதிக்கின்றன.

முதுமைக்கால மறதி நோயால் யார் பாதிக்கப்படுகிறார்கள்?

  • இங்கிலாந்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இங்கிலாந்தில் ஆண்களை விட பெண்களே முதுமைக்கால மறதி நோயால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதுமைக்கால மறதி நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம், ஆனால் அது இளம் வயதினரையும் பாதிக்கலாம்.

முதுமைக்கால மறதி நோய் ஒருவரை எவ்வாறு பாதிக்கிறது?

நம்மில் பெரும்பாலானோர் அவ்வப்போது விஷயங்களை மறந்துவிடுகிறோம், அதாவது நாம் நம்முடைய சாவியை எங்கே வைத்தோம் என்பது போன்று. அதனால் நமக்கு முதுமைக்கால மறதி நோய் இருப்பதாக அர்த்தமல்ல. ஒருவருக்கு முதுமைக்கால மறதி நோய் இருக்கும்போது, ​​அறிகுறிகள் காலப்போக்கில் மோசமடைந்து அன்றாட வாழ்க்கையில் தலையிடுகின்றன.

மக்கள் முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும்போது, ​​இவற்றில் சில நடப்பதை நீங்கள் காணலாம்:

Confused person with question mark above their head. Confusion is a common dementia symptom.

சமீபத்திய நிகழ்வுகள், பெயர்கள் மற்றும் முகங்களை மறந்துவிடுதல், அல்லது விஷயங்களை மீண்டும் மீண்டும் சொல்வது.

Calendar. Being unsure about the date or time is a common symptom of dementia.

அன்றைய நாளின் தேதி அல்லது நேரம் குறித்து உறுதியாகத் தெரியாமல் இருப்பது.

Two arrows going round in circles to represent repetition, which is a common dementia symptom.

கவனம் செலுத்துவதில் அல்லது எளிய முடிவுகளை எடுப்பதில் பிரச்சினைகள்.

Signpost with blank directions. People with dementia can often get lost more often.

தொலைந்து போவது, பெரும்பாலும் புதிய இடங்களில்.

Magnifying glass to represent people with dementia losing things more often.

பொருட்களைத் தவறான இடத்தில் வைப்பது.

Speech bubbles to represent communication problems that can be a symptom of dementia.

சரியான வார்த்தைகளைச் சொல்வதற்கு அல்லது மற்றவர்களைப் புரிந்துகொள்வதற்குச் சிரமமாக இருப்பது.

Trainer-Teal & Steel white

நடப்பதில் ஏற்படும் மாற்றங்கள், விறைப்புத்தன்மை, நடுக்கம் அல்லது சமநிலைப் பிரச்சினைகள்.

Gloomy cloud with rain to symbolise depression, which can be an early symptom of dementia.

சோகமாக இருப்பது அல்லது எளிதில் வருத்தப்படுவது அல்லது விஷயங்களில் ஆர்வத்தை இழப்பது போன்ற மனநிலை மாற்றங்கள்.

இது ஏன் நிகழ்கிறது?

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒருவருக்கு முதுமைக்கால மறதி நோய் ஏற்படுவதற்கான காரணம் நமக்குத் தெரியாது, அதே வேளையில் ஒருவருக்கு ஏன் ஏற்படாமல் போகலாம் என்பதும் நமக்குத் தெரியாது.

 

ஆனால் பக்கவாதம் வந்தவர்கள் அல்லது பின்வருவனவற்றைக் கொண்டவர்கள் போன்ற சிலருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மற்றவர்களை விட அதிகமாகும்:

  • வகை 2 நீரிழிவு நோய்.
  • உயர் இரத்த அழுத்தம்.
  • உயர் இரத்தக் கொழுப்பு.
  • மன அழுத்தம்.

இதைக் குணப்படுத்த சிகிச்சை இருக்கிறதா?

தற்போது முதுமைக்கால மறதி நோயைக் குணப்படுத்தக்கூடிய மருந்துகள் எதுவும் இல்லை. ஒருவருக்கு முதுமைக்கால மறதி நோய் ஏற்பட்டுவிட்டால், அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். அவர்களின் அறிகுறிகள் காலப்போக்கில் மோசமடையும், மேலும் அன்றாட வாழ்க்கையில் அவர்களுக்குக் கூடுதல் ஆதரவு தேவைப்படும்.

அன்றாட வாழ்க்கையைச் சிறிது எளிதாக்குவதன் மூலம் சிறிது காலத்திற்கு உதவக்கூடிய சில மருந்துகள் உள்ளன. அவர்களின் அறிகுறிகளுடன் சிறப்பாக வாழ உதவுவதற்காக மக்கள் பங்கேற்கக்கூடிய குழு நடவடிக்கைகளும் இருக்கலாம். உங்கள் மருத்துவரால் இவற்றைப் பற்றி மேலும் உங்களுக்குச் சொல்ல முடியும்.

எனக்கு முதுமைக்கால மறதி நோய் வருவதை என்னால் தடுக்க முடியுமா?

யாருக்கும் முதுமைக்கால மறதி நோய் வருவதைத் தடுக்க எந்த வழியும் இல்லை, ஆனால் அது வருவதற்கான வாய்ப்பைக் குறைக்க நாம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் உள்ளன.

Icons-ARUK-Occasional Teal_Heart_Heart

இரத்த அழுத்தம் மற்றும் இரத்தக் கொழுப்பு உள்ளிட்ட, உங்கள் இதய ஆரோக்கியத்தைச் சரிபார்க்குமாறு உங்கள் மருத்துவரிடம் செல்லுங்கள், அவை அதிகமாக இருந்தால் அவர்களின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள்.

apple icon AT

ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் சமச்சீரான உணவை உண்ணுங்கள்.

Blood drop

உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள்.

Brain icon

நீங்கள் விரும்பும் நடவடிக்கைகள் மூலம் உங்கள் மூளையைத் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

No smoking-Cool Mandarin

புகைபிடிக்காதீர்கள்.

running icon AT

சுறுசுறுப்பாக இருங்கள் மற்றும் உட்கார்ந்து கொண்டே அதிக நேரத்தைச் செலவிடாதீர்கள்.

Obesity-Teal & Steel white

உங்கள் எடையை ஆரோக்கியமான அளவில் வைத்திருங்கள்.

beer icon AT

வாரத்திற்கு 14 யூனிட்டுகளுக்குக் குறைவாக மது அருந்துங்கள்.

Listening-Orange

உங்கள் செவிப்புலன் மற்றும் பார்வைத்திறனைத் தவறாமல் பரிசோதித்து, பரிந்துரைக்கப்படும் ஏதேனும் சிகிச்சையைப் பின்பற்றுங்கள்.

Giving-Mandarin

உங்களைச் சுற்றியுள்ள உலகத்துடனும், மக்களுடனும் தொடர்பில் இருங்கள்.

உதவிக்கு எங்கு செல்ல வேண்டும்

உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு முதுமைக்கால மறதி நோய் இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், அவர்களை மருத்துவரைப் பார்க்க ஊக்குவிக்கவும். மருத்துவர் அவர்களின் பிரச்சினைகளுக்கு என்ன காரணம் என்று சோதிப்பார். சில நேரங்களில் அந்த நபர் எந்த வகையான முதுமைக்கால மறதி நோயைக் கொண்டிருக்கிறார் என்பதை அறிய மருத்துவமனைக்கு அனுப்பப்படலாம்.  உங்கள் உறவினர் அல்லது நண்பருடன் வருமாறு அவர்கள் உங்களிடம் கேட்டால் அவ்வாறே செய்யுங்கள்.

மருத்துவர் உங்களுக்கு உறுதியாகத் தெரியாத எதையேனும் சொன்னால், அதை விளக்குமாறு அவர்களிடம் கேட்கலாம்.

வேறு சில பயனுள்ள தொடர்புகள்:

அட்மிரல் நர்சஸ் (Admiral Nurses) முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நடைமுறை ஆலோசனை, ஆதரவு மற்றும் உதவிக்குறிப்புகளை வழங்குகிறார்கள்.

0800 888 6678

அல்சைமர் சங்கம் (Alzheimer’s Society) தகவல்கள், உதவி மற்றும் உள்ளூர் ஆதரவுக் குழுக்களை வழங்குகிறது. மொழிபெயர்ப்புச் சேவை கிடைக்கிறது.
0333 150 3456

அல்சைமர் ஸ்காட்லாந்து (Alzheimer Scotland) ஸ்காட்லாந்தில் உள்ள மக்களுக்கு ஆதரவுச் சேவைகள், தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறது.
0808 808 3000

இத்துண்டுப்பிரசுரம் நவம்பர் 2024-இல் எழுதப்பட்டதாகும்

இதை நவம்பர் 2026-இல் மீளாய்வு செய்ய வேண்டும்

 

Infoline banner-Alternative (1)

Dementia Research Infoline

Oes gennych chi gwestiynau am ymchwil dementia a chymryd rhan?
Rydym ar gael rhwng 9am a 5pm o ddydd Llun i ddydd Gwener i ateb eich galwadau.
0300 111 5111
infoline@alzheimersresearchuk.org
Mae’r galwadau’n gyfrinachol ac mae gwasanaeth cyfieithu ar gael.